அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

காலி, மாத்தறை மற்றும் அம்பந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படட அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை முகவர்களுக்கும் அவர்களது உதவியாளர்களும் நிவாரணம் வழங்கப்பட்ட்து..

16-June-2017

2017ம் ஆண்டு மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி லொத்தர் சபை விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களுக்கு வெள்ள நிவாரணப்பொருட்கள் மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்குரிய உபகரணங்கள் வழங்கள் செயற்திட்டம் ஒன்று 2017.06.11ம் திகதி கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவீ கருணாநாயக அவர்களின் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதன்போது 203 நிவாரணப்பொருட்கள் அடங்கிய பொதிகள், 26 விற்பனை குடில்கள், 51 ஒலிப்பெருக்கி இயந்திர தொகுதிகள் விற்பனை நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டது. இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தலைவர் திரு.ரொமேஷ் ஜயவர்தன அவர்கள் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு.அநுர ஜயரத்ன அவர்களுடன் அபிவிருத்தி லொத்தர் சபையின் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


LB dedicated to uplift the livelihoods of under-privileged communities in the Country
DLB considering online lottery for Millennials