அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எஸ்.ஏ.பி. சூரியப்பெரும நியமனம்

18-September-2017

அரச மற்றும் தனியார் துறைகளில் சிரேஷ்ட நிலைகளில் பதவி வகித்த எஸ்.ஏ.பி. சூரியப்பெரும, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் அடிப்படையில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கந்தப்பளை மஹிந்த கல்லூரியில் தனது ஆரம்பக்கல்வியை பூர்த்தி செய்திருந்த திரு.சூரியப்பெரும இரண்டாம் நிலைக்கல்வியை பொரமடுல்ல மத்திய கல்லூரியிலும் மினுவாங்கொடை மத்திய கல்லூரியிலும் தொடர்ந்திருந்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இவர் வணிக முகாமைத்துவத்தில் சிறப்புப்பட்டத்தை பெற்றுள்ளார்.

இலங்கை வங்கியில் இவர் முகாமைத்துவ பயிலுநராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்திருந்ததுடன், செலான் வங்கியில் இவர் சிரேஷ்ட முகாமையாளராக பணியாற்றியிருந்தார். இதனைத்தொடர்ந்து செலான் வங்கி ஸ்கைலாப்பில் பிரதம முகாமையாளராக கடமையாற்றியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, லங்கா சீமெந்து கம்பனியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார். சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இவர் பணியாற்றியிருந்ததுடன், சமுர்த்தி அமைச்சின் ஆலோசகராகவூம் இவர் பணியாற்றியிருந்தார். தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டிருந்ததுடன், ஆயூர்வேத மருத்துவ சம்மேளனத்தின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2004ல், பொதுத்துறையிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, இவர் உலகின் முன்னணி பாம் ஒயில் உற்பத்தியாளரான சிங்கப்பூரின் வில்மார் இன்டர்நஷனல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிரமிட் லங்கா பிரைவட் லிமிட்டெட்டின் சபை அங்கத்தவராகவூம் முதலாவது பொது முகாமையாளராகவூம் பணியாற்றியிருந்தார். இலங்கையில் பாம் எண்ணெய் பதப்படுத்தல் மற்றும் கொழுப்புகள் உற்பத்தியை அறிமுகம் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

2006ல், இந்தோ-லங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையின் பாம் எண்ணெய் மற்றும் கொழுப்புகள் ஏற்றுமதி தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட போது, இரு அரசாங்கங்களுக்குமிடையிலான கலந்துரையாடல்களின் போது, தனியார் துறை சார்பாக சூரியப்பெரும பிரதிநிதித்துவம் வகித்திருந்தார். அத்துடன், இந்தியாவூக்கு கொழுப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு கோட்டா முறை ஒன்றை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

வில்மார் இன்டர்நஷனலின் துணை ஹோட்டல் தொடரான Shangri-La இலங்கையில் ஸ்தாபிக்கப்படுவதற்கு இவர் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். 2012ல் இவர் வில்மார் இன்டர்நஷனலுடன் பணிப்பாளர் பொது முகாமையாளராக இணைந்து கொண்டார். கானாவில் வில்மார் ஆபிரிக்க வியாபார நடவடிக்கைகளை இவர் மேற்பார்வை செய்திருந்தார். ஆபிரிக்காவின் பென்சோ ஒயில் பாம் பெருந்தோட்டத்தின் கணக்காய்வூ சங்கத்தின் அங்கத்தவராகவூம் இவர் பணியாற்றியிருந்தார். 4 ஆண்டுகள் இந்த பணியை இவர் கானாவில் தொடர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து சிம்பாப்வேயின்இ ஹராரோ வில்மார் ஒலிவின் இன்டஸ்ரீஸில் இவர் வியாபார தலைமை அதிகாரியாக ஒரு ஆண்டு காலம் பணியாற்றியதை தொடர்ந்து, இலங்கைக்கு திரும்பியிருந்தார்.  

சூரியப்பெரும பொருளாதார வல்லுநராகவூம் நிதிப்பகுப்பாய்வாளராகவூம் பல தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பொருளாதாரங்கள் மற்றும் நிதி தொடர்பான ஆக்கங்களை இவர் பல தேசிய செய்தித்தாள்களுக்கு பங்களிப்பு செய்துள்ளார். குறித்த சில காலப்பகுதிக்கு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டிருந்த வாராந்த பொருளாதார கலந்துரையாடலின் பத்திரிகை எழுத்தாளராகவூம் இவர் செயலாற்றியிருந்தார்.


அபிவிருத்தி லொத்தர் சபை மாவட்ட விற்பனை விநியோக முகவர் சந்திப்பு
DLB dedicated to uplift the livelihoods of under-privileged communities in the Country