அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

சனிக்கிழமை அதிர்ஷ்டத்தின் 3000 ஆவது சீட்டிழுப்பு பெப்ரவரி 26ம் திகதி

03-February-2018

இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி சீட்டிழுப்பாக அறிமுகம் செய்யப்பட்ட சனிக்கிழமை அதிர்ஷ்டம் 3000 ஆவது பெருமைக்குரிய சீட்டிழுப்பு 2018 பெப்ரவரி 26ம் திகதி திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் லொத்தர் வாடிக்கையாளர்களை இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களாக மாற்றி 3 தசாப்த காலத்துக்கும் மேலாக மக்களின் வரவேற்பை சனிக்கிழமை அதிர்ஷ்டம் பெற்றுள்ளது.
அந்த மக்கள் வரவேற்புக்கு மேலும் வலுச்சேர்த்திடும் வகையில் சனிக்கிழமை அதிர்ஷ்டத்தின் 3000 ஆவது சீட்டிழுப்பின் போது வழமையான கோடிக்கணக்கான பரிசுகளுக்கு மேலதிகமாக, மேலும் பல விசேட பரிசுகளை கணனியினூடாக முன்னெடுத்து முதல் பரிசாக ஹொன்டா வெசல் வாகனம், இரண்டாம் பரிசாக 5 இலட்சம் ரூபாய் படி 5 பரிசுகள், மூன்றாம் பரிசாக பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் 3 மற்றும் நான்காம் பரிசாக ஸ்கூட்டி சைக்கிள்கள் 3 ஐ வழங்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன்இ சனிக்கிழமை அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டுக்கள் புதிய தோற்றத்தில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவூள்ளதுடன், 3000 ஆவது விசேட டிக்கட்டில் 7 இலக்கத்துடன் கூடிய விசேட இலக்கம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த இலக்கம் கணனி சீட்டிழுப்பின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் இலக்கத்துடன் பொருந்தச் செய்வதன் மூலமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிசுகளை வெற்றியீட்ட முடியூம்.
சனிக்கிழமை அதிர்ஷ்டம் டிக்கட்களை அதிகளவூ கொள்வனவூ செய்து தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறு அபிவிருத்தி லொத்தர் சபை சகல வாடிக்கையாளர்களிடமும் கோரிக்கைவிடுத்துள்ளது.
 


அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எஸ்.ஏ.பி. சூரியப்பெரும நியமனம்